fbpx

வரும் 4, 5 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று…! வானிலை மையம் எச்சரிக்கை…!

வரும் 4, 5 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 4-ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 5-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். வரும் 4, 5 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நோட்...! அரசின் ரூ.2,000 உதவித்தொகை வரவில்லையா…? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!

Thu Mar 2 , 2023
பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 13வது தவணை தொகையாக 2000 ரூபாய் வரவில்லை என்றால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம். பிரதமரின் பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 27ம் தேதி விடுவித்தார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக மொத்தம் ரூ. 16,800 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில விவசாயிகளின் […]

You May Like