fbpx

அசத்தல் அறிவிப்பு…! 2023 ஹஜ்‌ பயணத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…! முழு விவரம் உள்ளே…

ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஹஜ்‌ குழு மூலம்‌ ஹஜ்‌ 2023-ற்காக விண்ணப்பிக்கும்‌ முறை 10.02.2023 முதல்‌ ஆன்லைனில்‌ தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்தை இந்திய ஹஜ்‌ குழு இனையதளம்‌ மூலம்‌ அதாவது https://hajcommittee.gov.in/ என்ற இணையம்‌ வழியாக (அல்லது) மும்பை ஒந்திய ஹஜ்‌ குழுவின்‌ ‌செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில்‌ பதிவிறக்கம்‌ செய்வதன்‌ மூலம்‌ விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்‌. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 20-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்‌ 2023-ல்‌, விண்ணப்பதாரர்கள்‌ ஹஜ்‌ விண்ணப்பப்‌ படிவத்தை கட்டணம்‌ ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம்‌. விண்ணப்பதாரர்கள்‌ அங்கீகரிக்கப்பட்ட கோவிட்‌-19-க்கு எதிரான இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும்‌. இயந்திரம்‌ மூலம்‌ படிக்கத்‌ தக்க பாஸ்போர்ட்டின்‌ முதல்‌ மற்றும்‌ கடைசி பக்கம்‌, வெள்ளை பின்னணியுடன்‌ கூடிய சமீபத்திய பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படம்‌, உறைத்‌ தலைவரின்‌ இரத்து செய்யப்பட்ட காசோலை நகல்‌ அல்லது சேமிப்பு வங்கிக்‌ கணக்கு புத்தக நகல்‌ மற்றும்‌ முகவரிச்‌ சான்றின்‌ நகல்‌ ஆகியவற்றை பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

இந்த ஆண்டு, ஹஜ்‌ பயணிகள்‌ சென்னை புறப்பாட்டுத்‌ தளத்திலிருந்து ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ளலாம்‌. வாழ்நாளில்‌ ஒருமுறை மட்டும்‌ இந்திய ஹஜ்‌ குழு மூலமாக ஹஜ்‌ பயணத்தை மேற்கொள்ளலாம்‌ என்னும்‌ விதிமுறையை இந்திய ஹஜ்‌ குழு செயற்படுத்தி வருகிறது. ஹஜ்‌ 2023-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ்‌ குழுவின்‌ இணையதள முகவரி https://hajcommittee.gov.in/ மூலம்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... வரும் வாரங்களில் கூடுதல் கவனம் தேவை.. எச்சரிக்கும் நிபுணர்கள்..

Tue Mar 14 , 2023
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வரும் வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது.. இந்த வைரஸ் காரணமாக, இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. கொரோனா […]

You May Like