மாவட்ட தோறும் ஆன்லைன் மூலம் நீதிமன்ற விசாரணை….! குழு அமைத்த மத்திய அரசு…!

மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களை கணினி மயமாக்கி தொழில்நுட்பத்தின் மூலம் நீதிபெறும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த மின் நீதிமன்றங்கள் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக உச்சநீதிமன்றமும், சட்ட அமைச்சகமும் மின் குழு ஒன்றை அமைத்துள்ளன.


இதன் முதல் கட்டத் திட்டம் 2011 -2015 காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டத்திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 18,735 மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைய உள்ள நிலையில், 3-ம் கட்டத் திட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட மின் குழு அக்டோபர், 21 2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்திற்கான செலவின நிதிக்குழுவின் கூட்டம் 23.02.2023 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தின் 3-வது கட்டம், புதிய நவீன அம்சங்களை கொண்டுள்ளதாக அமையும். டிஜிட்டல் முறையிலான காகிதப் பயன்பாடற்ற நீதிமன்றங்கள் என்ற இலக்கை நோக்கியதாக இது அமையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார் ‌

Vignesh

Next Post

தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் அதிரடி உயர்வு..!! வெளியான முக்கிய அரசாணை..!!

Fri Mar 17 , 2023
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 7,500 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 12 ஆயிரம் […]
staff

You May Like