TnGovt: 9 முதல்‌ 12 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை…! Online மூலம் விண்ணப்பிக்கலாம்…!

மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை மூலம்‌ அரசு மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற கல்வி நிறுவனங்களில்‌ கல்வி பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை 1 முதல்‌ 5- வகுப்பு வரை பயின்று வருபவர்களுக்கு ரூ.1,000 , 6 முதல்‌ 8 வரை பயின்று வருபவர்களுக்கு ரூ. 3,000, 9 முதல்‌ 12 வரை மற்றும்‌ IIT, Diploma பயின்று வருபவர்களுக்கு ரூ.4000, இளங்கலை பயின்று வருபவர்களுக்கு ரூ.6,000.., முதுகலை, பி.இ, MBBS பயின்று வருபவர்களுக்கு ரூ.7000 என்ற வகையில்‌ கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அரசு மற்றும்‌ அரசு அங்கீகாரம்‌ பெற்ற கல்வி நிறுவனங்களில்‌ கல்வி பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ,‌ மாணவியர்கள்‌ விண்ணப்பித்து பயனடையலாம்‌. மேலும்‌ 9-ம்‌ வகுப்பு முதல்‌ கல்வி பயில்பவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூபாய் 2.50 இலட்சத்திற்கும்‌ குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள்‌ மத்திய அரசின்‌ கல்வி‌ உதவித்தொகை பெற https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

Vignesh

Next Post

கற்றாழை செய்யும் மாயம் !!

Sun Oct 16 , 2022
கற்றாழை அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சைகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. கற்றாழை கொண்டு தயாரிக்கப்படும் ஜெல், கற்றாழை தலை முதல் கால் வரை வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளுறுப்புகளுக்கும் நன்மை செய்யும் ஒரு தாவரம். அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த செடி கற்றாழை. ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் பிரபலமாகி வருவதால் அழகுக்காக வளர்க்கப்பட்டு வந்த செடி இன்று ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வெப்பமண்டல நாடுகளில் அதிகம் வளரும் […]

You May Like