fbpx

ஆவணங்களை சரிபார்க்க முயன்ற எஸ்.ஐ..!! சரமாரியாக வெட்டி சாய்த்த இளநீர் வியாபாரி..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வெங்கட துர்கா பிரசாத் என்பவர் சிறிய ரக சரக்கு வாகனத்தில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் நேற்று இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்ன ராவ் சிறிய ரக சரக்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இந்நிலையில், வெங்கட துர்கா பிரசாத் இளநீர் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னாராவை வெட்டினார்.

இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சின்னராவை அவர் மீண்டும் மீண்டும் சரமாரியாக வெட்டினார். தகவல் அறிந்து வந்த காக்கிநாடா போலீசார் சின்னராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட வெங்கட துர்கா பிரசாத்தை கைது செய்துள்ள போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

நாகர்கோவில் சர்ச்சைக்கு உள்ளான பாதிரியார் மீது வழக்கு பதிவு…..!

Sat Mar 18 , 2023
கன்னியாகுமரியில் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பாதிரியார் மீது 5️ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்துள்ள பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆண்ட்ரோ (29) அழகிய மண்டபம் அருகே விளங்கலையில் இருக்கும் தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் பெண்கள் சிலருடன் நெருக்கமாக இருப்பதைப் போன்ற வீடியோ மற்றும் உரையாடல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட […]

You May Like