fbpx

வாட்டி வதைக்க தயாராகும் வெயில்..!! ஏசியை இப்படி பயன்படுத்தாதீங்க..!! கரண்ட் பில் எகிறிடும்..!!

வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறையும் விரைவில் விடப்படும். நாள் முழுவதும் குழந்தைகள் ஏசி ரூமை விட்டு வெளியில் வரவே வராது. சிலர் பழைய ஏசியை சர்வீஸ் பண்ணி தயாராக வைத்திருப்பீர்கள். இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக புது ஏசியில் தான் நல்ல குளிர் என கூறி ரூமுக்கு புது ஏசியை மாட்டி விடுவர். என்னதான் புது ஏசி வாங்கினாலும் கரண்ட் பில்லுக்கு பயந்து குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் அதை பயன்படுத்துவோம்.

பெற்றோர்களுக்கோ கரண்ட் பில் எவ்வளவு வருமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஏசி இல்லாமலும் நாட்களை கடத்துவது கஷ்டமான காரியம். ஏசியும் போடணும். கரண்ட் பில்லும் கம்மியா வரணுமா? அதுக்கு சில வழிமுறைகளை சரியா ஃபாலோ பண்ணினாலே போதும். புதிய ஏசி வாங்கினால் ரேட்டிங் பார்த்து வாங்க வேண்டும். 5 ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அந்த ஏசி மின்சாரத்தை மிச்சப்படுத்தும். இன்வெர்ட்டர் ஏசி 35% வரை மின்சாரத்தை மிச்சப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது ஏசி பில்டர்களை சுத்தம் செய்துவிட வேண்டும். சூரிய வெளிச்சம் நேரடியாக படாத அறைகளுக்கு குறைவான திறன் கொண்ட ஏசியே போதும் என்கின்றனர் ஏசி மெக்கானிக்குகள். இன்னும் சிலர் ஏசியை எப்போதும் 17 அல்லது 18இல் வைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை மிகவும் தவறு. கரண்ட் பில் அதிகரிப்பதற்கான முதல் காரணமே இதுதான். ஏசியின் வெப்பநிலை 24 டிகிரியே போதுமானது. இதற்கு கீழ் வெப்பநிலையை குறைக்க குறைக்க ஏசி பில் எகிறி விடும்.

Chella

Next Post

மாணவர்கள் கவனத்திற்கு..!! 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும்..? அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி..!!

Sun Mar 19 , 2023
தமிழகத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். […]

You May Like