fbpx

தண்ணீர் கேன் வாங்க சென்ற தந்தை – மகன்! அறுந்து விழுந்த மின்சார கம்பி! பரிதாபமாக பலி!

மாமல்லபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் அறுந்து தொங்கிய மின்சார கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் கோதண்டன் வயது 42. இவ்வாறு சம்பவம் நடந்த தினத்தன்று தனது மகன் ஹேமநாதனுடன் தண்ணீர் கேன் வாங்குவதற்காக அருகிலுள்ள மெயின் பஜாருக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வயல்வெளி வழியாக சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பி ஒன்று அறுந்து விழுந்து இருக்கிறது.

இதனை அறியாமல் சென்ற கோதண்டத்தின் வாகனத்தில் உரசி மின்சாரம் பாய்ந்து அவரும் அவரது மகனும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை நேரில் கண்ட பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு மற்றும் மின்சாரத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பிறகு மின்கம்பியில் சிக்கியிருந்த இருவரது உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

"மாப்பிள்ளை பைக் கொடுத்தா தான் தாலி கட்டுவாரா..." விடாப்பிடியாக நின்ற மாப்பிள்ளை! நின்றுபோன திருமணம்!

Mon Mar 20 , 2023
வரதட்சணை கொடுமையால் பல பெண்களின் வாழ்க்கை பாலாகியது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நவீனமான காலகட்டங்களில் கூட வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. வரதட்சணை கேட்டு மணப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் வரதட்சணை கொடுக்காததால் திருமணங்கள் நிறுத்தப்படுவதும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் இன்னும் தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இது போன்ற ஒரு கொடுமையான சம்பவம் தான் வட மாநிலம் ஒன்றில் நடந்திருக்கிறது. […]

You May Like