நடிகை கிரோன் கெருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகையும், அரசியல்வாதியுமான கிரோன் கெருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டரில், “எனக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. அதனால் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தயவு செய்து உங்களைப் பரிசோதித்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டில், கிரோனுக்கு மல்டிபிள் மைலோமா, ஒரு வகையான இரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்று நோயிலிருந்து மீண்டு வந்த அவர், காட் டேலண்ட் என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவர்களில் ஒருவராக இருந்தார். பலரால் விரும்பப்பட்ட கிர்ரோன் பாலிவுட் படங்களில் மறக்கமுடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.