தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்னை காவல்துறையில் காலியாக உள்ள குதிரை பராமரிப்பாளர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்னை காவல் துறையில் குதிரை பராமரிப்பாளர் பணிக்கு பத்து காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் உச்சபட்ச வயது வரம்பு 32 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை சம்பளம் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 19. 4. 2023 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவங்களை அஞ்சல் மூலமாக காவல் ஆணையர் அலுவலகம், வேப்பேரி, சென்னை-600007 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.