வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இதில் வரி செலுத்துவோர் AIS for Taxpayer என்ற செயலியை கூகுல் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோர்களில் இலவசமாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். வரி பிடித்தம், வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரித்தொகை, வருமான வரி திரும்ப பெறுதல் மற்றும் இதர தகவல்களை மொபைல் செயலி மூலம் வரி செலுத்துவோர் தெரிந்து கொள்ளலாம். வரி செலுத்துவோர் பின்னூட்டம் இடுவதற்கான வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது.