fbpx

பேரழிவை ஏற்படுத்த வடகொரியா திட்டம்?… கடலுக்கு அடியில் செயற்கை சுனாமியை உருவாக்க சோதனை!… உலகநாடுகள் அச்சம்!

செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் முயற்சியாக புதிய அதிநவீன அணு ஆயுத டிரோனை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் நீண்ட நாட்களாக பகை நிலவி வருகிறது. இதனிடையே தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்த இரு நாடுகளும் சேர்ந்து கடந்த வாரம் கூட்டுப்போர் படை பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்துவரும் நிலையில், இந்த கூட்டுப்போர் படை பயிற்சிக்கு பதலடி தரும் விதமாக வடகொரியா தற்போது கடலுக்கு அடியில் புதிய அதிநவீன அணு ஆயுத பரிசோதனையை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது நாட்டின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரிய நாட்டின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலுக்கு அடியில் டிரோன் அணு ஆயுதத்தை செலுத்தி, அந்த டிரோன் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் சுமார் 60 மணி நேரம் பயணம் செய்து பின்னர், அதனை வெடித்து சிதற வைத்து செயற்கை சுனாமியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் எதிரிநாட்டு கடற்படைகள், மற்றும் துறைமுகங்களை தாக்கி அழிக்க வடகொரியா திட்டமிட்டுள்ளது.

Kokila

Next Post

இ-சேவை தொடங்க ரூ.6,000 கட்டணம் செலுத்தினால் போதும்...! எப்படி விண்ணப்பிப்பது...? ஆட்சியர் தகவல்...!

Sun Mar 26 , 2023
இ-சேவை மையம் தொடங்க ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு […]

You May Like