தேர்வில் இடம்பெற்ற கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி..!! சிறுமியின் பதிலால் ஆடிப்போன ஆசிரியர்கள்..!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் முக்கியமானது கால்பந்து. இந்தியாவில் கிரிக்கெட் அளவிற்கு கால்பந்துக்கு ரசிகர்கள் இல்லை என்றாலும், கேரளா, மேற்கு வங்கம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, கேரளாவில் அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுகல் போன்ற அணியை வெறித்தனமாக பின்பற்றும் ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஒரு குட்டி ரசிகையின் செயல் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் புதுபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி ரிசா பாதிமா. இவர், 4ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், சமீபத்தில் எழுதிய மலையாள பாடத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவர் எழுதிய பதில் தான் தற்போது வைரலாகி வருகிறது. தேர்வில், அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குறித்து கட்டுரை எழுதுங்கள் என 5 மார்க் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அந்த சிறுமி, நான் பிரேசில் நாட்டின் ரசிகை. எனக்கு வீரர் நெய்மாரை தான் பிடிக்கும். மெஸ்ஸியை பிடிக்காது என பதில் எழுதியுள்ளார்.

சிறுமியின் இந்த பதிலை பார்த்து ஆசிரியை அதிர்ச்சி அடைந்து மற்றவர்களிடம் காட்டியுள்ளார். பின்னர் சிறுமியிடம் அழைத்து இது குறித்து கேட்டபோது, அதற்கு அந்த சிறுமி நான் பிரேசில் ரசிகை தான். தேர்வு தாளில் மெஸ்ஸின் போட்டோவை பார்த்ததும் மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன் என்றுள்ளார். சிறுமியின் இந்த செயலும் அவர் பதில் எழுதிய தேர்வு தாளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CHELLA

Next Post

மாதம் ரூ.20,000 வரை ஊதியம்…! HDFC வங்கியில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Mon Mar 27 , 2023
HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Associate Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]
ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..! 100 பேரின் வங்கிக் கணக்கில் ரூ.13 கோடி..!

You May Like