வெள்ளத்தில் அடித்துச் சென்ற குரங்கை காப்பாற்றிய ’அனுமான்’…

கங்கை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குரங்கு ஒன்று ஆற்றின் நடுவில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை பிடித்து தப்பித்த சம்பவம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கங்கை நதி உள்ளது. இந்த நதிக்கரையில் குரங்கு தாவி தாவி விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் தண்ணீரில் தவறி விழுந்தது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குரங்கு ஆற்றின் நடுவில் ஒரு அனுமான் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சிலையை கட்டிப்பிடித்தவாறு ஏறி உயிர்தப்பியது.

இதையடுத்து தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் ஒரு சிறிய ரக படகில் சென்று குரங்கை மீட்டனர். அதுவரை அனுமான் சிலையை பிடித்துக் கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தது.இதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து வைரலாக்கினர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குரங்கு அனுமன் ’ஜி’ காப்பாற்றிவிட்டார் என்று குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அங்கிருந்த பக்தர்கள் அனைத்தும் அனுமன் செயல் என்றும் அவரால் காப்பாற்றப்பட்டுள்ளது. எனவும் கூறி பக்தி பரவசம்அடைந்தனர். பின்னர் குரங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் உணவு கொடுத்து வழியனுப்பிவைத்தனர்.

Next Post

’’அப்பு இறந்து 3 நாட்கள் கழித்தே விஷயம் தெரிந்தது, விஷயத்தை கேட்டு அதிர்ச்சியானேன்’… நடிகர் ரஜினிகாந்த் பேச்சு…!!

Tue Nov 1 , 2022
கர்நாடக திரையுலக பவர்ஸ்டார் என்றழைக்கப்படும் புனித் ராஜ்குமார் இறந்து 3 நாட்களுக்கு பின்னரே தனக்கு விஷயம் தெரிந்ததாகவும் பின்னர் கடும் அதிர்ச்சியடைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தோன்றி 67வது ஆண்டில்அடி எடுத்து வைக்கின்றது. இந்த விழாவை கொண்டாடும் விதமாக அரசு சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடக தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ’கர்நாடக ரத்ன’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று விருது வழங்கினார். சமூக […]

You May Like