fbpx

கணவர் தாக்கப்பட்ட வழக்கில் நண்பருடன் சின்னத்திரை துணை நடிகை அதிரடி கைது…..!பொள்ளாச்சியில் பரபரப்பு…..!

கோவை மாவட்டம் டி..நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (42) தனியார் தொழிற்சாலை ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார் இவருடைய மனைவி ரம்யா (30) 2 குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றன ரம்யா சின்னத்திரையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். அவ்வப்போது நல்ல கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு ரம்யா வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், கலந்த 19ஆம் தேதி ரமேஷும் ரம்யாவும் இருசக்கர வாகனத்தில் முத்து ஒரு சாலையில் இருந்து நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்த ஒரு நபர் ரமேஷை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அதன் பிறகு ரமேஷை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் ரம்யா.

பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரம்யா தன்னுடன் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகரான பீளமேடு டேனியல் சந்திரசேகர் மூலமாக கணவரை தாக்கி இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இருவரையும் நேற்று முந்தினம் காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் தரப்பில் இது தொடர்பாக தெரிவித்ததாவது, சின்னத்திரையில் நடிக்க வேண்டாம் என்று ரமேஷ் கண்டித்து வந்திருக்கிறார். ஆகவே ரமேஷின் வீட்டை விற்பனை செய்வதிலும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

முன்னாள் ராணுவ வீரர் படுகொலை….! ஆற்காடு அருகே பரபரப்பு….!

Mon Mar 27 , 2023
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சக்கரவல்லூர் அடுத்துள்ள எசையனூர் கிராமம் இலுப்பை சாலையைச் சார்ந்தவர் ஈஸ்வரப்பன் இவருடைய மகன்கள் குணசீலன் (38), கோபிநாதன்(30) உள்ளிட்ட இருவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இதில் இளையமகன் கோபிநாதனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியைச் சேர்ந்த குமாரின் மகள் ரம்யா (24) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை […]

You May Like