fbpx

சிலி நாட்டில் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்து கரை ஒதுங்கும் கடல் சிங்கங்கள்!… மனிதர்களுக்கும் பரவியதால் அச்சம்!

சிலி நாட்டில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடல் சிங்கங்கள் உயிரிழந்து வரும் நிலையில் முதன்முறையாக மனிதனுக்கு பரவியுள்ள சம்பவம் அதிச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பறவை காய்ச்சல் பரவி வருவதால் உலகம் முழுவதும் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், சிலி நாட்டின் வால்பரைசோ கடற்கரையில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடல் சிங்கங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன. மேலும் கடல் சிங்கங்களின் சடலங்கள் சிதைவால் ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக முக்கிய சுற்றுலா பாறை பகுதியான கேவ்ஸ் டி அன்சோட்டாவை மூடுவதாக அரிகா மேயர் அறிவித்துள்ளார். மேலும், மெலிபில்லாவில் கோழி பண்ணையில் உள்ள பணியாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தாக்காமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் சமீப நாட்களாக அங்குள்ள மனிதர்களுக்கு சளி இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளது. இது இன்ப்ளூயன்சா ரக காய்ச்சலாக இருக்குமோ என்ற கோணத்தில் அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை பறவைகளுக்கு மட்டுமமே பரவிய பறவை காய்ச்சல் தற்போது மனிதர்களையும் பாதித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நோய்த்தொற்றின் காரணத்தை கண்டறியவும், நோயாளியுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை அடையாளம் காணவும் சிலி நாட்டு அரசாங்கம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது .கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சிலியில் காட்டு விலங்குகளுக்கு H5N1 (பறவைக் காய்ச்சல்) வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்...! தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு...!

Sun Apr 2 , 2023
தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அரசின் கொள்கை குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி இழை வடம் மூலம் அதிவேக இணைய இணைப்புகளை உறுதி செய்வதில் பாரத் நெட் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியான தமிழ்நெட் மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்புறங்களையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. TNSWAN, BHARATNET மற்றும் TAMILNET ஆகியவற்றை […]

You May Like