பிரபல நடிகரும், ஆடை வடிவமைப்பாளருமான கிருஷ்ணா காலமானார்.
டோலிவுட்டின் பிரபல நடிகரும், ஆடை வடிவமைப்பாளருமான கிருஷ்ணா சென்னையில் நேற்று காலமானார். அவர் வயது தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்தார். பல டோலிவுட் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த காஸ்ட்யூம் டிசைனராக இருந்து நடிகராக மாறிய கிருஷ்ணா, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிருஷ்ணாவின் மறைவுக்கு டோலிவுட்டின் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.