fbpx

நண்பருக்காக விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…..!

விபத்துகள் ஏற்படுவது என்பது சில சமயங்களில் எதிர்பாராத ஒன்று, சில சமயங்களில் தவிர்க்க முடியாத ஒன்று என பல விதமாக பிரிக்கலாம். அந்த வகையில், அமெரிக்காவில் இந்தியருக்கு ஒரு சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஸ்வசந்த் கோலா இவர் அமெரிக்காவில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த நாட்டில் உள்ள போசன் விமான நிலையத்திலிருந்து தன்னுடைய நண்பரை அழைத்து வருவதற்காக சென்று உள்ளார்.

அங்கே அவர் பி வாயிலில் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அந்த கார் அருகிலேயே நின்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் பேருந்து ஒன்று அவர் மீது மோதி இருக்கிறது இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியானார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

" ஏன் எப்போதும் பாஜக சொல்வதை சொல்கிறீர்கள்..." செய்தியாளர்களிடம் கோபமடைந்த ராகுல்காந்தி..

Tue Apr 4 , 2023
காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோபமடைந்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம், காங்கிரஸ் கட்சி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல்காந்தி “ நீங்கள் ஏன் எப்போதும் பாஜக சொல்வதை சொல்கிறீர்கள். […]

You May Like