உலகளவில் 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கமான உடலுறவுக்குப் பிறகு கர்ப்பம் அடையவில்லை எனில் அது மலட்டுத்தன்மை என்று கருதப்படுகிறது.. பெண்களை போன்றே ஆண்களும் மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்நிலையில் மலட்டுத்தன்மை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில்” உலகளவில் சுமார் 17.5 சதவீதம் பேர், அதாவது 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களின் மன மற்றும் உளவியல் நல்வாழ்வை பாதிக்கிறது. மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலிவு விலையில், உயர்தர கருவுறுதல் பராமரிப்புக்கான வசதியை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது. இது உலகளவில் இது ஒரு பெரிய சுகாதார சவாலாக உள்ளது..
மலட்டுத்தன்மையைத் தடுத்தல், மற்றும் சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்படுவதால் பலருக்கு நிதியுதவி இல்லாமல் உள்ளன. தற்போது, பெரும்பாலான நாடுகளில், கருவுறுதல் சிகிச்சைகள் அதிக செலவில் செய்யப்படுகிறது. இதனால் அடிக்கடி மலட்டுத்தன்மை சிகிச்சையை பெற முடியவில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
உலக சுகாதார மையத்தின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் பாஸ்கேல் அலோடி இதுகுறித்து பேசிய போது “ கருவுறாமை சிகிச்சையைப் பார்த்த பிறகு மில்லியன் கணக்கான மக்கள் அதிகளவிலான சுகாதாரச் செலவுகளை எதிர்கொள்கின்றனர். சிறந்த கொள்கைகள் மற்றும் பொது நிதியுதவி ஆகியவை சிகிச்சைக்கான அணுகலை கணிசமாக மேம்படுத்தலாம்.. ஏழை குடும்பங்கள் மேலும் வறுமையில் சிக்குவதில் இருந்து பாதுகாக்கலாம்” என்று தெரிவித்தார்..