fbpx

திருமணம் ஆகி 20 ஆண்டுகள் கடந்த பின்னரும் குழந்தை இல்லை….! கணவன் செய்த சேட்டை தாங்காமல் மனைவி எடுத்த அதிரடி முடிவு….!

புதுவை கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கின்ற லோகநாதன்(52) இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தமிழரசி (48) இந்த தம்பதிகளுக்கு (26) வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆகிய நிலையில், இன்னமும் குழந்தை இல்லை. ஆகவே தமிழரசி தன்னுடைய உறவினர் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி லோகநாதன் தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இது தொடர்பாக அவருடைய மனைவி எழிலரசி வழங்கிய புகாரின் அடிப்படையில் கரிக்கலாம்பாக்கம் காவல்துறையினர் தற்கொலை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இத்தகைய சூழ்நிலையில், இது தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.

அதாவது லோகநாதனின் பிரேத பரிசோதனை அறிக்கையை புதுவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காவல்துறையிடம் வழங்கினர். அந்த அறிக்கையில் லோகநாதன் கொலை செய்யப்பட்டதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் லோகநாதனின் மனைவி எழிலரசி கணவர் லோகநாதனை கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார் என்பது தெரிய வந்தது.

அதாவது குழந்தை இல்லாத வருத்தத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான லோகநாதன் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து எழிலரசியை அடித்து, உதைத்து சித்திரவதை செய்ததாக சொல்லப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மது போதையில் வீட்டிற்கு வந்தால் லோகநாதன் வழக்கம் போல மனைவியிடம் தகராறு செய்து அவரை அடிக்க முற்பட்டிருக்கிறார். இதனை தடுப்பதற்கு முயற்சி செய்த எழிலரசி கணவரின் கழுத்தை பிடித்து நெரித்ததாக கூறப்படுகிறது. அதில் உலகநாதன் மூச்சு திணறி அங்கேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த எழிலரசி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துத்தான் போனார். இந்த விவகாரம் காவல்துறையினருக்கு தெரிய வந்தால் பிரச்சனை வந்துவிடும் என்று நினைத்த அவர், அதன் பிறகு கயிற்றால் தூக்கு மாட்டி கணவரின் உடலை தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதை போல நாடகமாடியுள்ளார்.

அதன் பிறகு காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து எழிலரசியை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

பெண்களே உஷார்..!! வீட்டில் தனியாக இருந்த பெண் மீது பாய்ந்த டெலிவரி ஊழியர்..!! சென்னையில் அதிர்ச்சி

Sun Apr 9 , 2023
சென்னை நீலாங்கரையில் உள்ள வெட்டுவாங்கேணி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (35). இவர், மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். அதன்படி, முன்னதாக துரைப்பாக்கம் எம்சிஎன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவரது வீட்டுக்கு மளிகைப்பொருட்களை டெலிவரி செய்ய ஜெயபால் சென்றுள்ளார். அந்த வீட்டில் இருந்த பெண் தனியாக இருப்பதை கண்டறிந்த ஜெயபால், திடீரென அந்தப் […]

You May Like