சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை பூமியை கடந்து சென்றால் அல்லது மோதினால் ஆபத்தானதாக இருக்கலாம்..
எனவே, இந்த அச்சுறுத்தல்களை சரியான நேரத்தில் சமாளிக்க, நாசா விண்கற்களின் இயக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில், இன்று மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளது.. விண்கற்கள் பூமிக்கு அருகில் சென்றாலும், அவை எதுவும் மேற்பரப்பை தாக்கும் அளவுக்கு அருகில் வருவதில்லை. இருப்பினும், எப்போதாவது தாக்கினால் பூமியில் பெரும் அழிவை ஏற்படுத்தும் என்பதால் விண்கற்களை நாசா கண்காணித்து வருகிறது…
அதன்படி இன்று பூமியை கடக்க உள்ள விண்கல்லின் வேகம், நெருங்கிய தூரம், அளவு மற்றும் பலவற்றைப் பற்றிய முக்கிய விவரங்களை நாசா வெளியிட்டுள்ளது. 2023 FT1 என்று பெயரிட்டுள்ள இந்த விண்கல், இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி 7.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். 110 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், விமானத்தின் அளவு பெரியது. இது மணிக்கு 23790 கிலோமீட்டர் என்ற அச்சமூட்டும் வேகத்தில் ஏற்கனவே கிரகத்தை நோக்கி விரைந்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.