நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று சனி நாளை ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அந்த வகையில், திருச்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா எதிர்வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வரும் 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆகவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, திருச்சி மாவட்டத்திற்கு வரும் 18 மற்றும் 19 உள்ளிட்ட தேதிகளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்கு வரும் 29ஆம் தேதி மற்றும் மே மாதம் 13ஆம் தேதி என்று 2 நாட்களும் வேலை நாட்களாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.