G Square..!! ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி ரெய்டு..!! சிக்கியது முக்கிய ஆவணங்கள்..?

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


ஜி ஸ்கொயர் (G Square)நிறுவனம் 2012ஆம் ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு கொடுங்கையூர், மணலி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை,
கோவை, திருச்சி, மைசூர், ஹைதராபாத், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இதனுடைய கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு இதன் கிளை நிறுவனங்களை விரிவுபடுத்தி விளைநிலங்களை வாங்கி விற்பனை மற்றும் கட்டுமான தொழிலும் செய்து வந்தது.

நிறுவனங்கள் தொடங்கி ஆண்டு ஒன்றுக்கு 56 கோடி ரூபாய் வருமான ஈட்டி வந்த இந்நிறுவனம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமான ஈட்டி வந்ததாக வருமானவரித்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிறுவனத்திற்கு ஆளும் கட்சி ஆதரவு இருப்பதால் மாநில காவல் முறையை பயன்படுத்தாமல் மத்திய ரிசர்வ் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று அதிகாலை வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிறுவனத்தின் முக்கிய நபர்களாக இருக்கும் பிரவீன் மற்றும் பாலா, அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அவரது மகன் கார்த்திக் உள்ளிட்டோரது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் காலை 6.30 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனையானது இரவு 11.00 மணியளவில் நிறைவடைந்தது. அதேபோல் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீட்டில் காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனையானது இரவு 10.45 மணியளவில் நிறைவு அடைந்தது. இந்நிலையில், இரண்டாவது நாளான‌ இன்று காலை மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

CHELLA

Next Post

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! 12 நாட்கள் வங்கிகள் செயல்படாது..!! வெளியானது புதிய அறிவிப்பு..!!

Tue Apr 25 , 2023
இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மாதம் தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரவிருக்கும் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகி உள்ளது. அதில் மே மாதம் வங்கிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட மொத்தம் 12 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடுமுறை […]
Bank Holidays Banks will be closed for 16 days in December Check out full list of vacations here 1

You May Like