தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் போதை பழக்கங்களை முற்றிலுமாக ஒழிக்கப் போவதாக தெரிவித்தது. ஆனால் தமிழகத்தின் போதை பொருட்களை ஒழிக்கப் போவதாக தெரிவித்துக்கொண்டு மறுபுறம் இளைஞர்களையும், இளம் தலைமுறையை சார்ந்தவர்களையும் போதைக்கு அடிமையாக்கி வருகிறது திமுக அரசு என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துவதற்கு ஏற்றார் போல தமிழக அரசு தற்போது தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த தானியங்கி மது வழங்கும் இயந்திரம் சென்னை, கோயம்பேடு வணிக வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தில் வயது வித்தியாசம் இன்றி யார் வேண்டுமானாலும் மதுவை வாங்கி குடித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தான் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனாலும் தற்போது தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்த வருகிறார்கள். அதோடு தானியங்கி மது வழங்கும் இயந்திரத்திற்கு இணையதளத்திலும் நெட்டிசன்கள் பலர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்கள்.