உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னுடைய காதலனை இரண்டாவதாக திருமணம் செய்த இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டபடியால் சுனிதாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இவர்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு கூறியதால் சுமிதா தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில், சுனிதாவின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் காதலர்கள் இருவரையும் கடுமையாக தாக்கி அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.