fbpx

நடிகர் விஜய்க்காக லோகேஷ் செய்த தரமான சம்பவம்..!! லியோ படத்தின் புதிய அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்காக லோகேஷ் கனகராஜ் 3 பாடல்களை படத்தில் வைத்துள்ளாராம். பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் பாடல்கள் இருக்காது. அப்படி இருந்தாலும் ஓரிரு பாடல்கள் தான் இருக்கும். ஆனால், மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்காக சில பாடல்களை லோகேஷ் வைத்திருந்தார். தற்போது நடிகர் விஜய்க்காக 3 பாடல்களை லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் வைத்துள்ளாராம். இதில் ஒரு பாடல் மிக பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் அதில் நடிகர் விஜய்யின் நடனம் அசத்தலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் அனிருத் லியோ படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Chella

Next Post

டாஸ்மாக் கடை முன்பே இளைஞர் படுகொலை…..! சென்னையில் பயங்கரம்…..!

Wed May 3 , 2023
சென்னை திருவொற்றியூர் எம்ஜிஆர் சாலையில் அரசின் டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது. இங்கே மது வாங்க எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் கோழி செல்வம் (32) என்பவர் நேற்று மதியம் வந்திருந்தார். அதே கடைக்கு எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மனோஜ் (24) எந்தவரும் வந்திருந்தார் இருவரும் கையில் கத்தியை வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் குத்தி விடுவதாக பாவலா செய்து வந்தனர். அப்போது திடீரென்று கோழி செல்வம், மனோஜை உண்மையிலேயே […]

You May Like