தமிழ் திரையுலகிற்கு பெரும் இழப்பு..!! பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மரணம்..!!

பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் டி. பி. கஜேந்திரன். இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி.முத்துலட்சுமியின் மகன் ஆவார். விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார். எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிலாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மேலும், பந்தா பரமசிவம், வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகிற்கு பெரும் இழப்பு..!! பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மரணம்..!!

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக டி.பி.கஜேந்திரன் இன்று காலை உயிரிழந்தார். சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

நள்ளிரவில் மொட்டை மாடி காதல்..!! சட்டென்று வந்த அம்மா..!! பதறிப்போன இளைஞர்..!! பரிதாப பலி..!!

Sun Feb 5 , 2023
சேலம் மாவட்டம் கொல்லப்பட்டி பகுதியில் சட்டக்கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கரூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் ஹரிணி, தாய் மற்றும் தங்கையுடன் வாடகைக்கு வீடு எடுத்து முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். சஞ்சய் – ஹரிணி இருவரும் கரூரில் படித்த போது 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், தங்களுடைய காதலை சட்டக் […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like