fbpx

பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்ட அதிகாரி….! கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்…..!

சென்னை குறளகம் வளாகத்தில் இருக்கின்ற பத்திரப்பதிவுத்துறை ஐஜி கட்டுப்பாட்டில் மாற்றுப் பாத்திரப்பதிவு உதவி செயல் பொறியாளர் அலுவலகம் ஒன்று செயல்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் விற்பனை பத்திரங்கள் இங்கே ஆய்வு செய்யப்பட்ட பிறகு தான் அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இத்தகைய நிலையில், இந்த அலுவலகத்தில் உதவி செயல் பொறியாளராக பணியாற்றி வந்த ரமேஷ் மற்றும் இளநிலை உதவியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவரது வாடிக்கையாளரின் ஆவணத்தை ஆய்வு செய்து அனுமதி வழங்குவதற்கு ஒரு ஆவணத்திற்கு 2,500 ரூபாய் என 10 ஆவணத்திற்கு 25000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் ஆலோசனையின் அடிப்படையில் ரசாயனம் தடவிய 25,000 ரூபாய் பணத்தை குரலாகத்தில் அவர்களிடம் கொடுத்த போது காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுடைய வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின் போது உதவி செயல் பொறியாளர் ரமேஷ் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத 8,64,500 ரொக்கம் மற்றும் இளநிலை உதவியாளர் விஜயகுமார் வீட்டிலிருந்து 18000 ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு இவர்கள் பணியில் இருந்த காலத்தின் போது சேர்த்த சொத்து விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றன.

Next Post

நிலத்தகராறில் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்…..! துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3️ பெண்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி…..!

Sat May 6 , 2023
மத்திய பிரதேசம் மொரேனா மாவட்டத்திலுள்ள லிபா கிராமத்தில் ரஞ்சித் தோமர், ராதே ராமர் உள்ளிட்ட இருவரும் குடும்பத்துடன் வெகு காலமாக வசித்து வந்தனர் இவர்களுக்கு இடையில் பல வருடங்களுக்கு முன்பிருந்தே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த 2014ஆம் வருடம் ரஞ்சித் ரோமர் மற்றும் ராதிகாமர் வெளியிட்டோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ரஞ்சித் ரோமரின் நண்பர்கள் ராதை தாமரை குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை […]

You May Like