சமீபத்தில் இருந்து தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. சைபர் குற்றங்களில் வங்கிகளில் இருந்து பேசுவதைப் போல டெபிட் கார்டு எண்களை பெற்று வங்கி கணக்கு பணம் திருடும் மோசடிகள் நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்னும் சற்று நூதனமான முறையில் வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்றோ, அல்லது மின் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றோ குறுஞ்செய்திகள் அனுப்பி அதில் உள்ள இணையதள லிங்கை கிளிக் செய்தால் பணம் பறிபோகும் வகையிலான மோசடிகளும் அரங்கேறி வந்தனர். தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் அமேசான் போன்ற நிறுவனங்களில் இருந்து கிப்ட் கூப்பன் வந்திருப்பதாக தெரிவித்து சில கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.
இது போன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு இல்லாமல் இருந்தாலோ,கவனக் குறைவுடன் செயல்பட்டாலும் நம்முடைய பணம் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இத்தகைய நூதனமான குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய நிறைவில், தான் வடமாநிலங்களில் இருந்து போலி சிம்கார்டுகள் வழங்கப்பட்டு தமிழகத்தை குறிவைத்து பல்வேறு என்பது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சார்ந்த ஆடவர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கப்பட்டு இருக்கின்றன.
இதே போல பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தியும் சிம்கார்டுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்தும் போலியான சிம்கார்டுகள் வாங்கப்பட்டு நிதி மோசடி நடைபெற்றிருக்கிறது அமேசான் பிளிப்கார்ட் பிரபல நிறுவனங்களின் பெயரில் நிதி மோசடிகள் அரங்கேறி இருக்கின்றன.
இதுபோன்ற போலியான சிம்காரர்களை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 22,000க்கு மேற்பட்ட சிம்கார்டுகளை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது