fbpx

தமிழகத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராய உயிரிழப்புகள்…..! காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை…..!

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழந்துள்ள நிலையில், புதுச்சேரி கலால் துறையின் வட்டாட்சியர், கலால் துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த தனிப்படை குழுவினர் பல பகுதிகளில் தங்களுடைய ஆய்வை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவிக்கும்போது புதுவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த தனிப்படை இதுவரையில் 66.33 லட்சம் மதிப்பிலான 433 பெட்டிகளில், மதுபானங்களை கைப்பற்றி இருக்கிறது. மேலும் 1425 லிட்டர் எரிசாராயமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதோடு 3 வாகனங்களும் பருமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கலாச்சாராயம் தொடர்பான மரணம் நடைபெற்று வருகிறது. என்று சூழ்நிலையில் எரி சாராயம் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வோம் என்று கூறியுள்ளார். இதற்கு நடுவே புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் எரி சாராய கடத்தல் தடுப்பு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கிறது.

உருளையன்பேட்டை காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் ரோந்து சென்றபோது விழுப்புரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த இருவரின் பைகளில் இருந்து 86 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சிக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வதாக வாக்குமூலம் வழங்கிய லாஸ்பேட்டை சிவக்குமார், ஜெயின் பால்பேட் லூசி மரியநாதன் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Next Post

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில்…..! தமிழ்நாடு முழுவதிலும் கள்ளச்சாராய வழக்கில் 1558 பேர் அதிரடி கைது…..!

Tue May 16 , 2023
தமிழ்நாடு முழுவதும் உள்ள கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதிலும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை காவல்துறை தரப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுவதிலும் நடைபெற்ற சாராய வேட்டையில் இதுவரையில், 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு […]

You May Like