fbpx

தமிழகத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராய விற்பனை……! முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு…..!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் கள்ளச்சாராயத்தை குறித்த பலர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசும், காவல்துறையும் முடுக்கிவிட்டு இருக்கிறது. அது தொடர்பான நடவடிக்கை காவல்துறை தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்க வாரம்தோறும் திங்கள் கிழமையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதோடு பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

சொத்துக்கு ஆசைப்பட்டு முதல் மனைவியின் குழந்தையை கொடூரமாக கொன்ற பெண்..!! அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Wed May 17 , 2023
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலைய பின்புறம் வசிப்பவர் சந்திரசேகர் (37). இவர், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள் ஹேமா (6). இவர் பிறந்த 2 மாதங்களில் அவரது தாய் சுமதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மனைவி இறந்த சில மாதங்களில் சந்திரசேகர், திருவண்ணாமலை மாவட்டம் காட்டேரி கிராமத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு […]

You May Like