fbpx

11TH RESULT: 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…..! எப்படி தெரிந்து கொள்ளலாம்….?

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் வெளியாகி உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக காத்திருக்கின்றன.

இந்த கல்வி ஆண்டுக்கான 11 ம் வகுப்புபொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வை 7, 70000 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில், 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணி அளவில் வெளியாக உள்ளது மாணவ, மாணவியர் பொது தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.dge.tn.gov.jn போன்ற இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அதோடு, குறுஞ்செய்தியின் மூலமாகவும் கைபேசிகளுக்கு தேர்தல் முடிவுகளை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது.

இதனைத் தவிர்த்து, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் பதிவு செய்திருக்கின்ற கைப்பேசி எண்ணுக்கும், குறுஞ்செய்தியின் மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

Next Post

அதிர்ச்சி …..! என்ன….? 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒருவர் கூட 500/ 500 மதிப்பெண் பெறவில்லையா……?

Fri May 19 , 2023
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9,40,000 மாணவ, மாணவியர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 91.39 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 4,30,710 மாணவிகளும், 4,04,904 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் 3718 பள்ளிகளில் 100% மாணவர் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட முழுமையான மதிப்பெண்களை பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய […]

You May Like