சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும், பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரை எடுத்துச் செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வுச்சட்டம், 2013, பிரிவு 7-ன்படி எந்த ஒரு நபரையும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்த கூடாது என சட்டம் உள்ளது.
இதனை மீறுவோர் மீது பிரிவு 9-ன் படி தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது. கழிவுநீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் வாகனங்களின் பதிவுப் புத்தகத்தில் வாகனத்தின் வகை, கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதியப்பட்டிருக்க வேண்டும்.
எனவே கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் பதிவுச்சான்றிதழில் கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதிவு செய்யப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை அணுகி பதிவுப் புத்தகம் மற்றும்அனுமதிச் சீட்டில் “கழிவு நீர் அகற்றும் வாகனம்” என உரிய தகுதிச்சான்றுடன் 15 தினங்களுக்குள் பதிவு செய்து கொள்ள பிரிவு 86 மோட்டா வாகன சட்டம்,1988-ன்படி இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு செய்து கொள்ள தவறினால், அணுமதிச்சீட்டு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.