திமுக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 7000 கோடி அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.
இந்த நிலையில், நிபந்தனைகளின் அடிப்படையில், தகுதி இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பான அரசாணைகள் இதுவரையில் வெளியாகவில்லை.
தற்போதைய தகவலின் அடிப்படையில், அரசின் மற்ற உதவி தொகை திட்டங்களின் மூலமாக பயனடைபவர்கள் அதாவது முதியோர் உதவித்தொகை, விதவை பென்ஷன் உள்ளிட்ட திட்ட பயனாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்த 1000 ரூபாய் உரிமை தொகையை இல்லை என்று சொல்லப்படுகிறது.
திடீர் திடீரென்று வெளியாகும் தகவல்களால் குடும்பத்தலைவிகளிடையே பெரும் அதிருப்தி ஏற்ப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கிடையே நமக்கு உரிமைத்தொகை கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இது ஒருபுறம் இருக்க எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் எழுந்துள்ளது.