fbpx

சென்னையில் பொது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டை அபகரித்து தம்பதிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை…..!

சென்னை திருவள்ளுவர் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று இருக்கிறது. இங்கே கடந்த 25ஆம் வருடம் அருணா வெங்கட்ராமன் என்பதற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீட்டை கல்யாண சுந்தரராமன் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக அருணா வெங்கட்ராமன் தன்னுடைய நண்பரான மந்தைவெளியைச் சேர்ந்த சௌந்தரராஜன் பெயரில் பொது அதிகார பத்திரத்தை பதிவு செய்து கொடுத்திருக்கிறார். இதற்கான முன் பணத்தை கல்யாணசுந்தரராமன் அருணா வெங்கட்ராமனுக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் தான் பொது அதிகார பத்திரத்தை தவறாக பயன்படுத்தி சவுந்தரராஜன் தன்னுடைய வீட்டை கல்யாண சுந்தரராமன் பெயரில் மோசடி பதிவு செய்திருக்கிறார். இது குறித்து கல்யாணசுந்தரம் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரம் விளக்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து சௌந்தரராஜன் அவருடைய மனைவி கற்பகம் உள்ளிட்டோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளம் நில அபகரிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி ராஜேஷ் ராஜு குற்றம் சுமத்தப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகிவிட்டதால் இருவருக்கும் தலா 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் கல்யாணசுந்தர ராமனுக்கு நஷ்டஈடாக 1.9 கோடி 3 மாத காலத்திற்குள் வழங்கவும் சௌந்தரராஜனுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Next Post

சென்னை| விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை…..! 63 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்…..!

Thu Jun 1 , 2023
துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தின் அடிப்படையில், சுற்றுலா விசாவில் துபாய் சென்று விட்டு திரும்பி வந்த அந்த பயணியின் பேட்டியை பரிசோதித்துப் பார்த்தபோது ரகசிய அறைகளின் கருப்பு கார்பன் பேப்பர்கள் சுற்றிய பார்சல்கள் இருந்தனர். அந்த பார்சலில் 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1கிலோ 165 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. […]

You May Like