fbpx

இனி மொபைல் எண் தேவையில்லை!… வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம்!… எப்படி தெரியுமா?… புது அப்டேட் இதோ!

கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள whatsapp செயலியைப் மொபைல் எண் இல்லாமலேயே பயன்படுத்தும் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

தங்களது பயனர்களைத் தக்கவைக்க அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நோக்கில் அவ்வப்போது புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது மெசேஜ்களைப் பகிர்ந்துகொள்ள whatsapp செயலிதான் முதலிடத்தில் இருக்கிறது. அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெட்டா நிறுவனம் அவ்வப்போது வழங்கும் அப்டேட்களே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அந்த வகையில்தான் அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு அப்டேட்டும் புதுப்புது அம்சங்களைக் கொண்டிருக்கும்.

அதன் வரிசையில் தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் தளங்கள் போன்று, வாட்ஸ் அப்பிலும் username முறை வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, இனி பயனர்கள் தங்களின் கணக்குகளுக்கு தனித்துவமான யூசர் நேம்களை வைத்துக் கொள்ளலாம். இதில் இனி வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தாமல், வெறும் யூசர் நேமைப் பயன்படுத்தி whatsapp-ல் யார் வேண்டுமானாலும் இணையலாம். இனி வாட்ஸ் அப் பயனர்கள் அவர்கள் விரும்பும் தனிப் பெயர்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களைப் பிறருக்கு அடையாளமாகக் காண்பித்துக் கொள்ளலாம். இந்த புதிய அம்சமானது அதன் பீட்டா அப்டேட்டில் விரைவில் அறிமுகமாகும் என வாட்ஸ் அப் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தில் பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘லாக் ஷாட்’ என்ற மற்றுமொரு புதிய அம்சத்தையும் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி ஒருவருடனான உரையாடலை பிறர் பார்க்காத வண்ணம் லாக் செய்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பிய 15 நிமிடத்திற்குள் அதைத் திருத்தும் புதிய அமைப்பையும் கொண்டு வருவதாக அப்டேட்களை அள்ளி வீசுகிறது மெட்டா நிறுவனம். ஏற்கனவே வாட்ஸ் அப்பில் போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றவருக்கு அனுப்பும்போது அதில் கேப்ஷன் உள்ளீடு செய்யும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இந்த கேப்ஷனை திருத்தி எழுதுவோ அல்லது டெலிட் செய்யவோ முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

இதுதான் என்னுடைய கடைசி போட்டி!... டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வார்னர்!... ரசிகர்கள் அதிர்ச்சி!

Mon Jun 5 , 2023
2024 ஆம் ஆண்டு ஜனவரியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்த டேவிட் வார்னர் ” வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்தான் என்னுடைய கடைசி போட்டி. இந்த பாகிஸ்தான் தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கிறேன். எனவே, அதற்கு முன்பு […]

You May Like