கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தம் இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே காதலாக வளர்ந்துள்ளது. ஆகவே சமீபத்தில் அந்த இளம் பெண்ணை பார்ப்பதற்கு புருஷோத்தம் துமகூரு பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது மருத்துவக் கல்லூரி மாணவி வைத்திருந்த கைபேசியை பயன்படுத்திவிட்டு தருவதாக தெரிவித்து புருஷோத்தம் வாங்கிச் சென்று அதன் பிறகு பெங்களூருக்கு கிளம்பி வந்து விட்டார். பின்னர் தன்னுடைய செல்போனை கொடுக்குமாறு இளம்பெண் கேட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் புருஷோத்தம் பெங்களூருக்கு வந்து உன்னுடைய செல்போனை வாங்கி செல் என்று தெரிவித்துள்ளார். அதன்படி அந்த இளம் பெண்ணும் கடந்த 6ம் தேதி பெங்களூருக்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, கிரிநகரில் இருக்கின்ற தன்னுடைய நண்பன் சேத்தன் வீட்டுக்கு அந்த இளம் பெண்ணை புருஷோத்தமன் அழைத்து வந்துள்ளார். அங்கே வைத்து அந்த இளம் பெண்ணுடன் புருஷோத்தம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். ஆனால் இதற்கு அந்த இளம் பெண் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து புருஷோத்தம் மயக்கம் அடைந்த காதலியை முதலில் பாலியல் பலாத்காரம் செய்தார் அதன் பிறகு நண்பர் சேர்த்தன ம் செய்திருக்கிறார் மயக்கம் தெளிந்த மருத்துவ கல்லூரி மாணவி வெளியில் ஓடி வந்து கூச்சலிட்டிருக்கிறார்.
ஆகவே அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருத்துவ கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து புருஷோத்தம் சேத்தன் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.