fbpx

அமேசான் மழைக்காட்டில் சிக்கித்தவித்த 4 குழந்தைகள்.. உயிருடன் மீட்கபட்டார்களா?

கொலம்பியாவில் 40 நாட்களுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 
கொலம்பியாவில் கடந்த மே 1 ஆம் தேதி ஒற்றை எஞ்சின்  உடைய விமானமத்தில் 6 பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானத்தில் 4 குழந்தைகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் விமானத்தில் இருக்கும் எஞ்சினில் பழுது ஏறபட்டுள்ளது. இதனால் விமானி அவசரநிலையை அறிவித்திருந்தார். அதன் பின் விமானம் வனப்பகுதிக்குள் நொறுங்கி விழுந்தது.


அமேசான் மழைக்காடுகளில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டது. விமானத்தில் விமானி, 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பயணம் செய்தனர். எஞ்சினில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் – குழந்தைகளின் தாய், உறவினர் மற்றும் விமானி உயிரிழந்தனர். ஆனால் 4 குழந்தைகள் உயிருடன் இருந்துள்ளனர். விமான விபத்தைத் தொடர்ந்து அமேசான் மழைக்காடுகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக, காணாமல் போன நான்கு குழந்தைகள், நேற்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர் என அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

Maha

Next Post

அப்படி எந்த ஒரு திட்டமும் எங்களிடம் இல்லை…..! +1 பொதுத்தேர்வு ரத்து பற்றி புதிய விளக்கத்தை கொடுத்த பள்ளிக் கல்வித் துறை……!

Sat Jun 10 , 2023
கோடை விடுமுறை முடிவடைந்து தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் அதாவது ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் செயல்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்வதற்கு பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக ஒரு தகவல் வேகமாக பரவியது. ஆனால் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறது. அதில் ப்ளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து என்று பரவும் […]

You May Like