பிபர்ஜாய் புயல் காரணமாக 15-ம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரபிக்கடலின் கிழக்கு மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ அதிதீவிர புயல் 14-ம் தேதி காலை வடக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, அதன்பிறகு வடக்கு – வடகிழக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, ஜூன் 15 அன்று நண்பகலில் மாண்ட்வி (குஜராத்)- கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவ் துறைமுகம் (குஜராத்) அருகே பாகிஸ்தான் கடலோரப் பகுதியையொட்டி சௌராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும். இதன் காரணமாக 56 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் 12-15 வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பிபர்ஜோய் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நேற்று 56க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, இன்று முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்படும்” என்று மேற்கு ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.