fbpx

செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கோவையில் கண்டன பொதுக்கூட்டம்.! திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் மதசார்பற்ற கட்சியின் தலைவர்கள் பங்கேற்பு – கோவையில் நடைபெற்ற செயற்குழுவில் அறிவிப்பு. கோவை டாடாபாத் அருகே உள்ள கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து அவசர செயற்குழு நடைபெற்றது

மாநகர மாவட்ட செயலாளர் நா கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில் 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்த அவசர செயற்குழுவில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் வரும் 16 ம் தேதி மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என செயற்குழுவில் மாநகர மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் அறிவித்துள்ளார். அந்த கண்டன பொதுக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 50,000 பேர் வரை இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக மாநகர மாவட்டச் செயலாளர் கார்த்திக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Maha

Next Post

சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களால் கோயிலுக்கு போகமுடியவில்லை

Wed Jun 14 , 2023
மத்திய அரசு பட்ஜெட்டை தவிர புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ1,500 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியா மீது மரியாதை வைத்துள்ளது. சமூகநீதியை பற்றி ஸ்டாலின், நாராயணசாமி பேசினார்கள் ஆனால் பிரதமர் மோடியின் சமூக நீதிக்கு உண்மையான எடுத்துக்காட்டு ஓ.பி.கமிஷனுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது தான், பட்டியலின மற்றும் சிறுபான்மை இனமக்களை குடியரசு தலைவராக்கி பாஜக அழகுபார்த்தது. சமூக நீதி பேசும் தமிழகத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு போக […]
’மின்சார சட்டத்திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பில்லை’..! - மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

You May Like