லிவிங் டுகதர் வாழ்வில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், இளம்பெண்ணை கொலை செய்த அவருடைய முன்னாள் காதலரை பிடிப்பதற்கு இயலாமல் பெங்களுரு காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
23 வயதாகும் அகான்ஷா என்பவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதே போன்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய 27 வயதாகும் ஆர்பித் என்பவரை சென்ற வருடம் அகான்ஷா சந்தித்துள்ளார்.
முதலில் வெறும் நட்பாக தொடங்கிய இவர்களின் உறவு பின்னாளில் இருவருக்கும் இடையில் ஒரே இல்லத்தில் தாங்கும் அளவுக்கு லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பாக மாறி உள்ளது. ஆனால் கொஞ்ச காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது வாய் தகராறு நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் அகான்ஷா தங்கி இருந்த வீட்டிற்கு கடந்த 5ஆம் தேதி சென்ற ஆர்பித் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதியில் அகான்ஷாவை கொலை செய்த அவர் இங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த அதான்சாவின் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணை என்பது சம்பவம் தற்கொலை போன்று தெரிய வந்தது அதனை தற்கொலையாக மாற்ற சீலிங் ஃபேனில் அவரது சடலத்தை ஆர்பித் தொங்கவிட முயற்சித்துள்ளார்.
ஆனாலும் அவருடைய முயற்சி தோல்வியில் முடிந்ததால் தன்னுடைய செல்போனை அங்கேயே விட்டு,விட்டு அவர் மட்டும் தப்பி சென்று விட்டார் இது குறித்து தனிப்படை. அமைத்துள்ள காவல் துறையினர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர தேர்தல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
மேலும் அவர் சொந்த ஊரான டெல்லிக்கு சென்று இருக்கலாம் என்கின்ற அடிப்படையில், காவல்துறையினர் டெல்லிக்கும் விரைந்து இருக்கிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் தினறி வருகிறார்கள். இது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உயிரிழந்த அகான்ஷா குடும்பத்தில் அவர்தான் மூத்த மகளாவார் அவருக்கு 2 தங்கைகள் மற்றும் தம்பி இருக்கின்றனர். மூலமாகத்தான் தங்களது பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்து வந்ததாக அவருடைய தந்தை ஞானேஸ்வர் தெரிவித்துள்ளார். அதோடு, ஆர்பித் யார் என்பது தங்களுக்கு தெரியாது எனவும் அகான்ஷாவின் மரணத்திற்கு பிறகு தான் அவர் தொடர்பாக தெரிய வந்ததாகவும் கூறியிருக்கிறார்.