முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: “இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தனது அமைச்சரவைக்கு யார், யாருக்கு எந்த, எந்தத் துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதல்வருக்குத்தான் உள்ளது. ஆனால் முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாகவே உள்ளது. அந்த செயலை ஆளுநர் தவிர்த்திருக்க வேண்டும். பொது சிவில் சட்ட கருத்துக் கேட்புக்கு முதல்வரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விசயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நீதிமன்றக் காவல், வழக்கு நிலுவையில் இருக்கும்போது அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது என எந்த சட்டத்திலும் இடம் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும் தான் பதவியில் இருக்கக் கூடாது. ஆளுநர் தொடர்ந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்” என்றார்
Next Post
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு..!! வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
Fri Jun 16 , 2023
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் […]

You May Like
-
2024-12-16, 10:38 am
குக்கரில் பருப்பு வேக வைக்க போறீங்களா..? இத பாத்துட்டு போங்க..
-
2022-07-08, 6:51 am
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.. எங்கு தெரியுமா..?
-
2025-02-28, 12:57 pm
தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்.. யார் இந்த அமுதா..?
-
2024-09-26, 6:17 am
மாநாடு ஏற்பாடு.. த.வெ.க பொதுச் செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்…!