கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர்…! முதல்வருக்கு அண்ணாமலை சவால்…!

கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர். தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கருத்து.

கோவையை சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். பாஜக ஆதரவாளரான இவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உமா கார்க்கி26 என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக திமுகவை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் என்பவர் புகார் அளித்தார்.


புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை குறித்து நேற்று தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல. பாஜகவினரை கைது செய்தால் தான் கட்சி வளரும். ஒரு நாள் சிறைக்குப் போனால் ஒரு வருட கட்சி பணியை செய்தது போலாகும். பேச நடவடிக்கை மூலம் பாஜகவின் முதலமைச்சருக்கு தனது பதிலை கொடுத்துள்ளார்.

Vignesh

Next Post

முட்டையை அதிகளவில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வந்துவிடும்!

Wed Jun 21 , 2023
முட்டையை அதிக அளவில் உட்கொள்வதால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து தொகுப்பில் காணலாம். மனிதர்களின் மிகச் சிறந்த நண்பராக கருதப்படுகிறதுமுட்டைகள். சமையல் பயன்பாடு மட்டுமின்றி, அதில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பது அதன் பிரபலத்துக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஏராளமான புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு போன்றவற்றை முட்டை கொண்டுள்ளது. மேலும், பல சத்துக்கள் நிறைந்து உள்ளது . அதிக முட்டைகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் […]
Classic Egg

You May Like