மதுரையைச் சேர்ந்த தேவ்ஆனந்த்(29) பாத் இசை கலைஞரான இவர் நண்பர்களுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நடத்தி வருகிறார் இத்தகைய நிலையில், தேவ் ஆனந்த் நேற்று முன்தினம் இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற உணவகம் ஒன்றில் 5 நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரியை நடத்தி இருக்கிறார்.
அந்த கச்சேரியை முடித்துவிட்டு 2 நண்பர்களை திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருக்கின்ற அவரது வீட்டில் விட கார் சென்று கொண்டிருந்தார். அருகே பயணம்பாக்கம் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் தேவ ஆனந்த் காரை வழிமறித்து அவரை தட்டி முனையில் கடத்திச் சென்று உள்ளது.
இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் திருவேற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதல் கட்ட விசாரணையில் இறங்கினர். அந்த விசாரணையில் தேவ் ஆனந்தியின் அண்ணன் சிரஞ்சீவி மதுரையில் சீட்டு கம்பெனி நடத்தி பலருக்கும் பணத்தை திரும்பி வழங்காமல் சுமார் 3 கோடி ரூபாய் வகையில் மோசடி செய்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்தது.
அவரிடம் பணத்தை இழந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், அவருடைய தம்பி தேவ்ஆனந்த் சென்னை பகுதிக்கு கச்சேரிக்காக வந்திருப்பதை அறிந்து அதன் பிறகு அவரை பின்தொடர்ந்து வந்து அவரை கடத்திச் சென்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக திருவேற்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேவ் ஆனந்த் மற்றும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர் இந்த நிலையில் தான் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் திரைப்பட பாணியில் கடத்தல் காரை காவல்துறையினர் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கடத்தல் கும்பலை சார்ந்த முத்துப்பாண்டி, கார்த்தி, முத்து, கருப்பசாமி உள்ளிட்ட 4️ பேரை பிடித்து அவர்களிடம் இருந்து தேவ் ஆனந்தை மீட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தேவ் ஆனந்த் மற்றும் கடத்தல் காரர்களை திருவேற்காடு காவல் நிலையத்திற்கு காவல் வாகனத்தில் அழைத்து வந்தனர் அதோடு இந்த கடத்தல் குறித்து 6 பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.