ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவர் சனா என்ற பெண்ணை கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த தம்பதிகளுக்குள் திருமணம் ஆகி ஒரு வருட காலம் வாழ்க்கையானது சமூகமாகவே சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் சனாவின் கணவர் ஹேமந்த் தன்னிடம் இசை கற்பதற்காக வந்த ஒரு பெண்ணிடம் திருமணத்தை கடந்த விரைவில் இருந்ததாகவும் ஒரு நாள் அவர்கள் இருவரும் சனாவிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து சனாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் செய்த கொடுமையின் காரணமாக, சனா தன்னுடைய கணவருக்கு திருமணத்தை கடந்த உறவு இருப்பது உட்பட, தனக்கு நடைபெற்ற அனைத்து கொடுமைகளையும் பேஸ்புக் நேரலையில் விவரித்த பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற விவரங்கள் அனைத்தும் சனாவின் தற்கொலைக்குப் பிறகு அவருடைய பெற்றோர்களிடமிருந்து வாக்குமூலமாக காவல்துறையினர் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்து அவருடைய கணவர் மற்றும் அந்த பெண்ணுடனான உரையாடலை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.