டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், விற்பனையாளர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை நடப்பதாக பல புகார்கள் வந்துள்ளன.
சமீபத்திய புகார்களை ஆய்வு செய்ததில் ஒரு பாட்டிலுக்கு `10 கூடுதல் கட்டணம் எங்கும் வசூலிக்கப்படுவதில்லை. சில புகார்கள் அரசியலாக்கப்படுகின்றன. இருப்பினும், அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். கூடுதலாக கட்டணம் வசூலிப்பது அரசுக்கு தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பானது மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் விற்பனையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மின் கட்டணம் வாடகை பராமரிப்பு செலவு போன்றவற்றிற்கு அரசு சார்பில் இருந்து குறைவான நிதியே கொடுக்கப்படுகின்றது. இதனால் பாட்டில் ஒன்றிற்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசு இதில் தலையிட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.