செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்ததாகவும், ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சைகள் முடிந்து தற்பொழுது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் ஜூலை 12ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருப்பதாலும், அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், .அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பது, சட்டப் படியான விசாரணையை பாதிக்கும். இறுதியில் அரசியலமைப்புகள் சீரழியும் நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை, ஆளுநர் நீக்கம் செய்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
ஆளுநரின் உத்தரவுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு கட்சிதலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து செந்தில் பாலாஜி நீக்கம் பற்றி மத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம் கருத்தை கேட்க முடிவு செய்துள்ளதாகவும், பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்ததாகவும், ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.