சூரிய கிரகணம்.. நடை சாத்தப்பட்டதை சாதகமாக்கிய திருடர்கள்.! காஞ்சி கோவிலில் கொள்ளை.!

அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கிழக்கு கைலாசநாதர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் 1000 ஆண்டு பழமையாது என அறிய படுகிறது.

அற்புதமான சிலைகளான நடராஜர், சிவகாமி அம்பாள், நடன சுந்தரர் ,முருகர் பிரதோஷ நாயகர் மற்றும் நாயகி உள்ளிட்ட ஆறு பஞ்சலோக சிலைகளையும். மேலும் முருகர் வள்ளி, விநாயகர் , தெய்வானை என பத்து சுவாமி சிலைகளையும் கடந்த ஆண்டு 2018 ல் மீண்டும் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் பூஜைக்கு பின் நடை சாத்தப்பட்ட நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் பக்தர்கள் கோயிலை தரிசிக்க வந்தபோது கோயிலின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கோயிலில் பொருத்தப்பட்டிருந்த 8 சிசிடிவி கேமராக்களில் ஒரு கேமரா தவிர அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளது. 11 பூட்டுகளையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நிலையில், அது நிறைவேறாமல் போனதால் காணிக்கையாக இருந்த சுமார் ரூ.2000 மதிப்புள்ள சில்லறை காசுகளை திருடிக் கொண்டு அங்கு இருந்த கோயில் மதில் சுவர் ஏறி குதித்து தப்பியுள்ளனர்.

இவை அனைத்தும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. மேலும், அந்த சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் முகத்தை கொண்டு காவல்துறை அவர்களை தேடி வருகின்றனர். கோயிலில் இருந்த 6 பஞ்சலோக சிலைகள் உட்பட 10 சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என தெளிய வந்துள்ளது.

Baskar

Next Post

காதலி வீட்டினர் போட்ட நாடகம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட காதல் ஜோடி.!

Thu Oct 27 , 2022
சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே 26 வயதான கோபி விசைத்தறி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக கோபி காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி தற்போது 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு சென்று கோபி பெண் கேட்டுள்ளார். 18 வயது முடிந்த திருமணம் செய்து கொடுக்கிறோம் என்று சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அவரை அதன் பின் வீட்டை […]
பக்தரிடம் பரவசம் காட்டிய இளம்பெண்..!! பறந்த மனசால் ரூம் போட்ட விபரீதம்..!! நடந்தது என்ன?

You May Like