நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், “அந்த நடிகை சொன்ன நிபந்தனை ஒன்று தான். ‘என் அறைக்கு பலர் வருவார்கள், அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. 7 மணிக்கு நான் நிகழ்ச்சிக்கு வந்திடுவேன்’ என்று கண்டிஷன் போட்டார். நடனமாட மறுத்து தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்த நடிகை. இந்த அனுபவத்தை பெற்றவன் நான் தான். நெல்லை மாவட்டம் முக்கூடல் கிராமத்தில், முத்து மாரியம்மன் கோயில் விழா ஆவணி மாதம் நடக்கும். பிரபல பீடி நிறுவனம் தான் அந்த விழாவை நடத்தும். அந்நிறுவனத்தினர் தன்னை அழைத்து, 2 திருவிழாக்கள் நடத்த வேண்டும். முதல்நாள் விழாவிற்கு எஸ்.வி.சேகர் நாடகமும், மறுநாள் கவர்ச்சி நடிகையை கூப்பிடுங்கள், அவரது டான்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றார். பணமும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு.
முதல்நாள் எஸ்.வி.சேகர் நாடகம் சிறப்பாக நடந்தது. 2-வது நாள் எனக்கு படப்பிடிப்பு காரணமாக சென்னை வந்துவிட்டேன். அந்த கவர்ச்சி நடிகை லாட்ஜில் இருந்தார். சென்னை கிளம்பும் முன் அந்த நடிகையை பார்க்கப் போனேன். நான் பார்த்த போது பயங்கர போதையில் இருந்தார். ‘ஏம்மா.. சரியா நிகழ்ச்சிக்கு போயிடு, நான் சென்னை போறேன்’ என்று கூறினேன். ஏற்கனவே அட்வான்ஸ் ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட்டேன். இன்னும் ரூ.10 ஆயிரம் தான் தர இருந்தது.
ஆனால், அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக ஒரு தொழிலதிபருடன் இருந்துவிட்டார் அந்த நடிகை. நிகழ்ச்சிக்கு போகவில்லை. பாக்கித் தொகையை அவருக்கு தரவில்லை. வாங்கி அட்வான்ஸ் தொகையை அந்த நடிகை தரவில்லை. போதாக்குறைக்கு திமிராகவும் பேசினார். அந்த சமயத்தில் அந்த நடிகை முக்கிய கட்சியின் தலைமை கழக பேச்சாளராகவும் இருந்தார். எல்லா கூட்டங்களிலும் பேச 25 ஆயிரம் ரூபாய் வாங்குவார். அந்த நடிகைக்கு சொந்தமான பங்களாவில் அந்த கட்சியின் நிர்வாகி வாடகைக்கு இருந்தார். அவரிடம் போய், அட்வான்ஸ் தொகையை கேட்டு உதவி கேட்டேன். ‘அவ்வளவு தானனே, இருங்க வாங்கித் தருகிறேன்’ என்று அவர் தான் அந்த அட்வான்ஸ் தொகையை வாங்கி கொடுத்தார்.
அவர் வாங்கித் தராமல் போயிருந்தால், என்னுடைய கணக்கில் காந்தி கணக்காக அந்த பணம் சேர்ந்திருக்கும். அல்வா கொடுப்பதில் அந்த நடிகை பயங்கர கெட்டிக்காரி. சேலத்தில் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு அந்த நடிகையை புக் செய்தார்கள். அதில் பங்கேற்க அந்த நடிகை சொன்ன நிபந்தனை ஒன்று தான். ‘என் அறைக்கு பலர் வருவார்கள், அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. 7 மணிக்கு நான் நிகழ்ச்சிக்கு வந்திடுவேன்’ என்று கண்டிஷன் போட்டார். சொன்னபடி 7 மணிக்கு வந்து நிகழ்ச்சி செய்தார். அந்த நம்பிக்கையில் தான் அவரை முக்கூடல் நிகழ்ச்சிக்கு புக் பண்ணேன்.
சேலத்தில் மூன்று, நான்கு பேர் அந்த நடிகை அறைக்கு வந்து சென்றார்கள். நான் அந்த கணக்கை கூட சரியாக எடுக்கவில்லை. ஆனால், சொன்னபடி நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். அந்த நம்பிக்கையில் தான் அட்வான்ஸ் கொடுத்தேன். முதல் நிகழ்ச்சியில் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தவர், அடுத்த நிகழ்ச்சியில் அல்வா கொடுத்துவிட்டார்” என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.