சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை திடீரென்று என்று 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளியின் நிலை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தற்காலியின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. சென்னைக்கு வரக்கூடிய தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுவதால் தக்காளியின் விலை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து தான் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மொத்த விலைகளிலும் சில்லறை விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் தற்சமயம் சென்னைக்கு 30 சதவீத தக்காளி வரத்து குறைந்து, ஒரு நாளைக்கு 400 டன் தக்காளி மட்டுமே வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதன் விலை கிடு கிடுவென அதிகரித்திருக்கிறது