திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் அன்பகம் என்ற பெயரில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகம் கடந்த 1999 ஆம் ஆண்டு வீரமணி என்பவரால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்த காப்பகத்தில் பெண்கள் முதியோர் மனவளர்ச்சி குன்றியோர் என்று 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த காப்பகத்தில் தங்கி இருக்கும் பெண் வருவருக்கு காப்பக நிர்வாகியான வீரமணி பாலியல் தொல்லை வழங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் சமூக வலைதளம் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவின் அடிப்படையில், தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை மேற்கொண்டு அந்த புகாரில் உண்மை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டார். இதனை தொடர்ந்து, வீரமணி கைது செய்யப்பட்டார்.
அதேசமயம் இந்த விவகாரம் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல் நாத் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்த காப்பகம் முறையாக உரிமம் இன்றி அரசு மேய்க்கால் மற்றும் புறம்போக்கு இடத்தில் இயங்கி வருகிறது மிக விரைவில் இந்த காப்பகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்தார்